நானும், என் சிந்தனைகளும்….

Month

March 2010

பென்னாகரம் தேர்தலும் முடிந்தது… மின்சாரம் நிறுத்த அறிவிப்பும் வந்தது….

தலைப்பை பார்த்தவுடனே உங்களுக்கு புரிந்து இருக்கும்… நான் எதைப்  பற்றி எழுத போகிறேன் என்று. அது ஏன், இவ்வளவு நாட்களாக காத்திருந்து இன்று வந்தது மின் தடை அதிகரிக்கும் அறிவிப்பு. அதுவும் 3 மணி நேரமாக அதிகரிப்பு. எங்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். புதுப்புது தொழிற்சாலைகளா நம்ம ஊரில் வருது, நிறைய பேருக்கு வேலை தரப்போகுது என்று… Continue Reading →

ஆட்டோக்காரர்களா இல்லை அநியாயக்காரர்களா?

இந்த வாரம் நான் என் தொழில் சம்பந்தமாக புதுக்கோட்டை வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கே நடந்த ஓர் அனுபவத்தை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் எந்த ஊருக்கு சென்றாலும், ஆட்டோ எடுக்கும் முன், பக்கத்தில் இருக்கும் கடையில் நான் போக வேண்டிய இடத்திற்கு  ஆட்டோவில் சென்றால் எவ்வளவு செலவாகும் என கேட்டு தெரிந்து தான்… Continue Reading →

ஏன் நம் கல்வி முறையில் மாற்றம் தேவை?

நம்மில் பலரும் சொல்லும் ஒரு கருத்து, கல்வி முறையில் மாற்றம் தேவை. எதற்கு தேவை? எப்படி மாற்றம் தேவை? புது திட்டம் எப்படி இருக்கவேண்டும்? மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும்? இதைப் பற்றி என் கருத்துக்கள் சில.. என்னுடைய முன் கட்டுரையான “குழந்தைகளா இல்லை அம்பானியின் க்ளோனிங்கா?” என்னும் தலைப்பின் தீர்வாகவோ இல்லை அதன் தொடர்ச்சியாகவோ… Continue Reading →

கோவில் செல்லவே தயக்கமா இருக்கு… யார் பொறுப்பு?

நான் கடவுளை வெறுப்பவனும் அல்ல, விரும்புவனும் அல்ல. நான் என் போக்கில் செல்பவன். இருந்தாலும், என் குடும்பத்தாரின் தேவைகளுக்கு ஏற்ப, அவர்களுடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்கையில், கோவில்களில் இப்பொழுது சில விஷயங்களில் பெரிய மாற்றம் தெரிகிறது. அதுவும், இந்த சில வருடங்களில் தான் இந்த மாற்றம். வேண்டுதல் இருந்தால் மட்டும் கோவிலுக்கு மக்கள்… Continue Reading →

உலகம் சுருங்க சுருங்க, உறவுகள் சிதைகின்றன

பள்ளி நாட்களும், கல்லூரி நாட்களும் நம் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள். அழகான வருடங்கள். கால காலத்திற்கும் நினைத்தால் கூட நம்மை ஒரு புன்னகை பூக்க வைக்கும் ஒரு வசந்தகாலம். மறக்கமுடியாத நிமிடங்கள், நாட்கள், நண்பர்கள் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கும். காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் கீழே கொடுத்தவைகளில் எதாவது ஒரு விஷயம் உங்களை,… Continue Reading →

என்னது கவுண்டமணி காலமாகிவிட்டாரா?

ஒரு தமிழ் பிரபல பத்திரிக்கையின் ஆன்லைன் பதிப்பில், இது போன்ற ஒரு செய்தி. “கவுண்டமணி மாரடைப்பால் மரணம்”. இது காலை 11.30 மணி அளவில் வந்தது. அதே பத்திரிக்கையில் மதியம் 12.45 அளவில், இது ஒரு வதந்தி என மீண்டும் ஒரு செய்தி. கவுண்டமணி காமெடி நடிகன் தான். ஆனால் அவர் வாழ்கையை வைத்தே ஒரு… Continue Reading →

கலைஞர் காப்பீடு திட்டம் – வரவேற்கலாமா?

ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான சிகிச்சை இலவசம். இது தான் இதன் தாரக மந்திரம். இந்த பட்ஜெட்டில் இதற்காக 750 கோடி அறிவித்து இருக்கிறார்கள். என்ன ஓர் நல்ல ஐடியா. ஆனால் இது சரியா என்று எனக்கு தோன்றவில்லை. எதற்காக இந்த அரசாங்க மருத்துவமனை என்ற திட்டம் நம் ஜனநாயக நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது?… Continue Reading →

என்ன பாவம் செய்தது கோவை?

கோவை நன்றாக தானே இருக்கிறது? இருந்தது. அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? வருகிறதே “தமிழ் செம்மொழி மாநாடு” அது தான் பிரச்சனை. எப்படி என கேள்வி எழுகிறதா? மேலும் படியுங்கள். நம் அரசு என்று கோவையில் செம்மொழி மாநாடு என்று அறிவித்ததோ அன்று துவங்கியது கோவையை அழகு செய்யும் வேலை. எல்லாம் படு வேகமாக. கோவை… Continue Reading →

குழந்தைகளா இல்லை அம்பானியின் க்ளோனிங்கா?

இன்று எனது வேலையின் சம்பந்தமாக இரு பெற்றோர்களை (குடும்பங்களை) சந்திக்க வேண்டி இருந்தது. கல்வி துறை சம்பந்தமாக என் தொழில் இருப்பதால், தினமும் பல குடும்பங்களை சந்தித்து கொண்டிருக்கிறேன். அவர்களுடைய குழந்தைகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு நல்ல படிப்பை கொடுக்க எவ்வளவு கஷ்ட படுகிறார்கள் என்று பார்க்கும்போது,… Continue Reading →

விண்ணைத்தாண்டி வருவாயா?

அட நம்ம சிம்புவா இது…? நல்ல தேர்ந்த நடிப்பு, சரியான தேர்வு. படம் முடிந்து வெளியே வரும் பொழுது, எதோ ஒரு உணர்வுபூர்வமாக இருக்கிறது. இது போன்ற மென்மையான படங்கள் என்னை எப்பொழுதுமே கவர்கின்றன. மொழி, பசங்க மற்றும் அழகிய தீயே அவைகளில் சில. ஒரு அமைதியான காதல் படம். ஆரம்ப காட்சிகளிலேயே சிம்புவும், திரிஷாவும்… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑