நானும், என் சிந்தனைகளும்….

Category

அனுபவம் புதுமை

அவ்ளோ சுலபமா உங்கள விடமாட்டோம்

ஒரு நாள் ஏர்டெல்லில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில்: “சார் இப்போ நாங்க ஹை-ஸ்பீட் மோடம் மாத்தி கொடுத்துகிட்டு இருக்கோம். இந்த மோடம் மூலமா உங்க இண்டர்நெட் ஸ்பீட் 16Mbps முதல் 40 Mbps வரை இருக்கும். இதற்க்கு நீங்க ரூபாய் 1000 மட்டும் கட்டினால் போதும்” என்றார்கள். (நான் உடனே அவர்களுடைய வெப்சைட்டை எனது… Continue Reading →

தமிழக காவல்துறைக்கு ஒரு பாராட்டு

மதிய நேரம்… வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அலைபேசி அழைத்தது.“சார், நான் B7 காவல் நிலையத்தின் காவல் அதிகாரி பேசுறேன்” என்றார். சொல்லுங்க சார் என்றேன். “சார், உங்க மேலஒரு வழக்கு இருக்கு. உங்கள பார்க்க அபார்ட்மென்ட் வாசல இருக்கேன், கொஞ்சம் கீழே வந்து போக முடியுமா சார்” என்றார். காவல்துறை நம்மை நண்பன் என்று சொன்னாலும்,… Continue Reading →

ஊருக்குத்தான் உபதேசம்

விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டிற்கு வந்திருந்தாள். எதோ எழுத்து வேலை இருப்பதாக சொல்லி, 5 வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொன்னாள். நானும் கடைக்கு சென்று 5 வெள்ளைத்தாள் கேட்டேன். ஒரு மதிக்கத்தக்க பெரியவர் உள்ளே சென்று எடுத்து வந்தார். எவ்வளவு என்று கேட்டேன். 3 ரூபாய் என்றார். 10 ரூபாயை எடுத்து கொடுத்தேன். சில்லறை எடுத்துக்கொண்டிருந்தார்…. Continue Reading →

ஒவ்வொருத்தருக்கும் ஒரு FEELINGS….

வழக்கமாக விமான பயணங்களின் போது நான் என் இருக்கையை நடுவில் இருக்கும் “அவசர வெளியேற்றம்” (Emergency Exit) அருகில் வாங்கிக்கொள்வேன். ஆபத்தின் போது முதலில் தப்பிக்கிறதுக்கு இல்லேங்க. உள்ளூர் விமானங்களில் இருக்கைகள் மிகவும் நெருக்கமாக இருக்கும். காலை கொஞ்சம் நீட்டினாலே இடிக்கும். மலிவு விலை விமான சேவையின் விளைவுதான் இது, வேறொன்றும் இல்லை. விமானத்தின் நடுவே… Continue Reading →

டென்ஷன் ஆகாதீங்க பாஸ்

ஒரு நாள் காலை 10:00 மணி “சார் Times of India ல இருந்து கூப்பிடுறோம். இந்த வருடத்துக்கான சந்தாவை எப்போ சார் கட்டுறீங்க?” – இல்லேங்க, நான் இந்த வருடம் புதுப்பிக்கவில்லை. “ஏன் சார், எதாவது பிரச்சனையா?” – அதெல்லாம் இல்லீங்க. அலுவலகத்திலும் வாங்குவதால், வீட்டுக்கு வேண்டாம். ரொம்ப நன்றி. “சரிங்க சார்”. அதே… Continue Reading →

போதும்டா சாமி…. ஆள விடுங்க

இன்று சிறு தொழில்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டுத் தான் ஆரம்பித்தார்கள்.அழைக்கப்பட்டிருந்த முதன்மை விருந்தாளிகளில் ஒரு பல்கலைகழகத்தின் பேராசிரியரும் ஒருவர். அவர் பேச ஆரம்பித்த பொழுது, இவரிடம் இருந்து வரும் மாணவர்கள் எப்படி வருவார்கள் என்று எண்ண தோன்றியது. ஒருத்தார் பேசும்பொழுது குறுக்கிடக்கூடாது, பேசி முடித்தவுடன் பேச… Continue Reading →

என் எழுத்துக்கள்…

நண்பர்களே, எனக்கு எழுதுவதில் மிகப்பெரிய ஆர்வம். ஆனால் இதுவரை நான் எழுதியது இல்லை. நிறைய படிப்பேன், படிக்கும்பொழுது நாமும் இது போல எழுத வேண்டும் என்று பல முறை நினைத்தது உண்டு. ஏன், என்னோட சுய சரிதை கூட எழுத வேண்டும் என்று சில நேரங்களில் வேடிக்கையாக நினைத்தது உண்டு. ஆனால், எந்த எண்ணத்தையும் நான்… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑