நானும், என் சிந்தனைகளும்….

Category

அரசியல்

விவசாயிகளால் என்ன செய்யமுடியும்?

நமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே விட்டு அங்கே பிச்சை கேட்கிறாள். தமிழ்நாடு அரசாங்கமும் தன் உட்கட்சி பிரச்சனையை விட்டு வருடமாகியும் வெளியே வரமுடியவில்லை. இதில் மற்ற பிரச்சனைகளை எங்கே பார்ப்பது.  கண்டுகொள்ள ஆளில்லை, எடுத்து சொல்ல… Continue Reading →

கச்சத்தீவும்… நம் மீனவனின் பாடும் – பாகம் 2

சரியாக 3 வருடத்திற்கு முன்பு நான் இந்திய மீனவர் பிரச்சனையின் மூல காரணத்தை எழுதியிருந்தேன். முடிவில்லா அப்பிரச்சனை இன்றைய தேதியில் மிகவும் அதிகரித்துள்ளது. அதை மேலும்அண்டை நாட்டு ராணுவம் நம் மக்களை தாக்குவது ஒரு தொடர் செயலாக இருக்கும்பொழுது, ஏன் நம் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? சாவது மீனவன் தானே என்ற நினைப்போ? இல்லை,… Continue Reading →

மோடி ஒரு மந்திரச்சொல்: பாகம் 3

2002ல் குஜராத் கலவரங்களுக்கு பின் தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் முதல்வர் பதவிக்கு வரும்பொழுது அந்த முதலமைச்சர் நாற்காலி முழுதும் முட்களாக காணப்பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், இந்திய பெரும் தொழில் நிர்வாகிகளும் இனி குஜராத்தை தவிர்ப்போம் என குரல் கொடுத்தனர். 2003ல் புது தில்லியில் கூடிய இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மோடியை விருந்தினராக அழைத்திருந்தது…. Continue Reading →

மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 2

மோடியின் தேசத்தில் பயணத்தை தொடருவோம்.  போன அத்தியாயத்தில் மின்சார புரட்சியை கொஞ்சம் எழுதி இருந்தேன் அல்லவா? இதோ, அதில் மேலும் ஓர் புரட்சி. மின்சாரம் தேவைக்கு மேல் இருந்தாலும், இவர்கள் நின்றுவிடவில்லை. சூரிய ஒளியில் மாபெரும் புரட்சியை செய்தார் மோடி. நர்மதா ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கால்வாயின் மேல் சுமார் 750 மீட்டர்  நீளத்திற்கு… Continue Reading →

மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 1

மீண்டும் குஜராத்தில் மோடி நான்காவது முறை. குஜராத்தில் மட்டுமில்லை, இந்தியா முழுதும் இப்பொழுது மோடி ஒரு மந்திர சொல்லாகவே இருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு முதலமைச்சராக உள்ளார். மின்சாரம் தடை இல்லாமல் கிடைகிறது, எல்லா தொழில் நிறுவனங்களும் குஜராத்தில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன. ரத்தன் டாட்டா ஒருமுறை வைபரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது “100… Continue Reading →

BBCயின் இந்த மூடுவிழா யாரால்?

கேபிள் தொலைகாட்சி முறையை டிஜிட்டலாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றி, கெடுவும் கொடுத்து, பல முறை அந்த கெடுவை  நீடித்தும் கொடுத்தாகிவிட்டது. இன்னும் ஒன்றும் நடந்தபாடில்லை. இந்த டிஜிட்டலாக்கத்தால், நுகர்வோர் தேவையான சேனல்களை மட்டும் பணம் செலுத்தி பார்க்க முடியும். இதனால் மாதாந்திர கேபிள் செலவு மிக குறையும். தேவையில்லாத எந்த சேனலுக்கும் பணம்… Continue Reading →

மாண்புமிகு முதலமைச்சருக்கு….

மாண்புமிகு முதலமைச்சருக்கு ஒரு தமிழ் குடிமகன் எழுதும் கடிதம். எங்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் செவி கொடுப்பீர்களா என்று தெரியாது. இருந்தாலும், என் மனதில் தோன்றியவற்றை இங்கே தொகுத்துள்ளேன். ஒரு சாதாரண தமிழ் குடிமகனாக எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. போன தேர்தலின் போது உங்களின் எதிர் கட்சி இலவசத்தை தேர்தல் அறிக்கையில் சேர்த்தபொழுது  வெகுண்டு எழுந்த… Continue Reading →

பென்னாகரம் தேர்தலும் முடிந்தது… மின்சாரம் நிறுத்த அறிவிப்பும் வந்தது….

தலைப்பை பார்த்தவுடனே உங்களுக்கு புரிந்து இருக்கும்… நான் எதைப்  பற்றி எழுத போகிறேன் என்று. அது ஏன், இவ்வளவு நாட்களாக காத்திருந்து இன்று வந்தது மின் தடை அதிகரிக்கும் அறிவிப்பு. அதுவும் 3 மணி நேரமாக அதிகரிப்பு. எங்களை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். புதுப்புது தொழிற்சாலைகளா நம்ம ஊரில் வருது, நிறைய பேருக்கு வேலை தரப்போகுது என்று… Continue Reading →

கலைஞர் காப்பீடு திட்டம் – வரவேற்கலாமா?

ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான சிகிச்சை இலவசம். இது தான் இதன் தாரக மந்திரம். இந்த பட்ஜெட்டில் இதற்காக 750 கோடி அறிவித்து இருக்கிறார்கள். என்ன ஓர் நல்ல ஐடியா. ஆனால் இது சரியா என்று எனக்கு தோன்றவில்லை. எதற்காக இந்த அரசாங்க மருத்துவமனை என்ற திட்டம் நம் ஜனநாயக நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது?… Continue Reading →

என்ன பாவம் செய்தது கோவை?

கோவை நன்றாக தானே இருக்கிறது? இருந்தது. அப்புறம் என்ன பிரச்சினை என்கிறீர்களா? வருகிறதே “தமிழ் செம்மொழி மாநாடு” அது தான் பிரச்சனை. எப்படி என கேள்வி எழுகிறதா? மேலும் படியுங்கள். நம் அரசு என்று கோவையில் செம்மொழி மாநாடு என்று அறிவித்ததோ அன்று துவங்கியது கோவையை அழகு செய்யும் வேலை. எல்லாம் படு வேகமாக. கோவை… Continue Reading →

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑