நானும், என் சிந்தனைகளும்….

Category

புகைப்படங்கள்

மழை காலம் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. பெங்களூருவில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருக்கும்போது நெடுஞ்சாலை நடுவே இருந்த செடிகள் வித விதமான வண்ணங்களில் அழகாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அதை என் அலைபேசியில் எடுத்தது.

என் தங்கை மகள் பிரத்திகா. தங்கை குடும்பம், குடும்ப புகைப்படம் எடுப்பதற்க்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். பிரத்திகா முதலில் தயராகி உட்கார்ந்திருந்தாதால் அவளை ஒரு புகைப்படம் எடுக்கலாம் என எண்ணி எடுத்தது. இவ்வளவு அழகாக வரும் என்று எண்ணவில்லை. இதுவும் அலைபேசியில் எடுத்ததே…

கோவையிலிருந்து கரூர் செல்லும்போது, மேகம் மழைமூட்டத்துடன் அழகாக இருந்தது. பொங்கலூர் அருகே செல்லும்பொழுது வானையும் மேகத்தையும் காரில் செல்ல செல்ல புகைப்படம் எடுக்க தோன்றியது. வண்டியின் வேகத்தை சிறிது குறைத்து லாரி குறுக்கே வருவது அறியாமல் எடுத்த படம் இது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே… இடம்: பொங்கலூர், கோவை – திருச்சி சாலை  

எங்களுடைய குலதெய்வ கோவிலின் கோபுரம்.  அதன் வேலைப்பாடும் மங்காத வண்ணமும், அழகான கார் மேகங்களும் இதை அவ்வளவு அழகாக காண்பிக்கின்றது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே. இடம்: முத்தூர், ஈரோடு மாவட்டம்

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑