மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 1

மீண்டும் குஜராத்தில் மோடி நான்காவது முறை. குஜராத்தில் மட்டுமில்லை, இந்தியா முழுதும் இப்பொழுnarendra_modiது மோடி ஒரு மந்திர சொல்லாகவே இருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு முதலமைச்சராக உள்ளார். மின்சாரம் தடை இல்லாமல் கிடைகிறது, எல்லா தொழில் நிறுவனங்களும் குஜராத்தில் தொழில் தொடங்க போட்டி போடுகின்றன. ரத்தன் டாட்டா ஒருமுறை வைபரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது “100 வருடங்களுக்கு மேல் நாங்கள் தொழில் செய்து வருகிறோம். ஆனால் இதுவரை, இப்படி ஒரு வேகத்தை நான் பார்த்தது இல்லை. ஒரே வாரத்தில் நானோ கார் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து ஒப்பந்தங்களும் தாயார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்” என மோடி நிர்வாகத்தை பாராட்டினார். இப்படி குஜராத்தின் வளர்ச்சி எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளதற்கு என்ன காரணம்? எப்படி இது அங்கே சாத்தியமானது. நான் பார்த்த, எனக்கு தெரிந்த குஜராத் இதோ இங்கே.
மோடியை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, குஜராத் மக்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தேசத்தந்தை காந்தி, இரும்பு மனிதர்  வல்லபாய் படேல்,  மொராஜி தேசாய், பாகிஸ்தானின் தந்தை ஜின்னா என மிகப்பெரும் தலைவர்களையும் விக்ரம் சாராபாய், ஹோமி பாபா, சுனிதா வில்லியம்ஸ் என அறிவியலாளர்களையும், அம்பானி, ரத்தன் டாட்டா, உதய் கோடக், அசிம் பிரேம்ஜி என தொழில் துறை சாதனையாளர்களையும் இந்தியாவிற்கு கொடுத்துள்ளது குஜராத். குஜராத்தில் பிறந்த குறிப்பிடும்படியானவர்களை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் இந்த பக்கத்தை பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/List_of_people_from_Gujarat
பொதுவாகவே அரசியல், தலைவர்கள் பற்றிய என்னுடைய கருத்து “மக்கள் எப்படியோ, அரசன் அப்படியே”. நம்மைத்தான் நம்முடைய தலைவன் பிரதிபளிக்கிறார்கள். நம்மில் திறமையானவன் தான் மேலே செல்கிறான். நாம் எப்படியோ, தலைவனும் அப்படியே. அது தமிழகமாகட்டும், குஜராத்தாகட்டும் ஒரே நியதி தான். சினிமா பைத்தியமாக உள்ள நம் தமிழ்நாட்டில் சினிமாக்காரன் தான் ஆள்வான். மோடியின் வெற்றியும் அப்படித்தான். குஜராத் மக்களைத்தான் மோடி பிரதிபலிக்கிறார். மதுபான வருமானத்தில் அரசாங்கம் நடத்தும் மாநிலங்களுக்கு இடையே, மதுபான கடைகளே இல்லாத ஒரு மாநிலம் என்றால் அது குஜராத் தான். அது காந்தி பிறந்த மண்ணுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை.நான் பார்த்தவரை மக்கள் மிக நல்லவர்களாக, உண்மையானவர்களாக உள்ளனர். நம்பிக்கை தான் அங்கு அவர்களின் மூலதனம். நம்பிக்கையை வைத்து தான் தொழில் செய்கிறார்கள். யாரையும் சந்தேகத்துடன் பார்ப்பது இல்லை. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். எங்களின் வேலை நிமித்தமாக தில்லியில் இருந்து ஒருவரை காந்திநகருக்கு

வரவைத்திருந்தோம். 3 நாட்கள் முடிந்து அவர் திரும்பி செல்ல, விடியற்காலை 4 மணிக்கு விடுதி அறையை காலி செய்து கணக்கு முடிக்க கீழே வந்தோம். நாங்கள் கட்டவேண்டிய தொகை ஏறக்குறைய 10,000 க்கும் மேலாக இருந்தது. எனது வங்கி அட்டையை (Debit Card) எடுத்து கொடுத்தேன். அவரோ மெசின் பழுது அடைந்துள்ளதாகவும், அட்டையை இப்பொழுது ஏற்க இயலாது எனவும் கூறினார். அந்த நேரத்தில் எங்கு போய் பணம் எடுப்பது என்று அவரை கேட்டேன். அவரோ, ஒன்றும் பிரச்னை இல்லை, நீங்கள் உங்கள் நண்பரை விமான நிலையத்தில் விட்டு விட்டு வந்து காலையில் பொறுமையாக கொடுங்கள் என்றார். இதற்கும், நாங்கள் தங்கி இருந்தது வேறொரு விடுதியில். நாங்கள் திரும்பி வராவிடில் அவர் பணம் அவ்ளோ தான். எங்களுடைய அலைபேசி எண் கூட அவர் கேட்டுக்கொள்ளவில்லை. நான் மிகைபடுத்தவில்லை. இது போல பல நிகழ்ச்சிகள் நான் பார்த்துள்ளேன். இவ்வளவு ஏன், 20 நாட்கள் தங்கும் விடுதிக்கு வெறும் 1000 ரூபாய் முன் பணமாக (Advance) வாங்கினார்கள். நிறைய முறை ஆட்டோ ஓட்டுனர்கள் பத்து ரூபாய், இருபது ரூபாய் எல்லாம் சில்லறை இல்லை என்று, அடுத்த முறை பார்க்கும் பொழுது கொடுங்கள் என்று பணம் வாங்காமல் சென்றதுண்டு. அவர்கள் சொல்வது ஒரே வார்த்தை தான் “நம்பிக்கை”. கோடிகணக்கான தொழில், பண கைமாற்று எல்லாம் வெறும் பேச்சு நம்பிக்கையில் நடக்குமாம். சத்தியமாக என்னால் முதலில் நம்ப முடியவில்லை. ஆனால் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே குற்றங்கள் குறைந்த மாநிலம் இது தான். பெண்களுக்கு எதிரான வன்முறை இங்கே அறவே இல்லை எனலாம். காந்தி கண்ட கனவான, நடுநிசியில் நகை அணிந்த பெண் தனியாக தைரியமாக செல்லும் நிலைமை இங்கே இருக்கிறது. பொதுவாகவே இங்கு மக்கள் கோபப்டுவதில்லை. சாலையில் இரு வாகனங்கள் மோதிகொண்டாலோ உரசிக்கொண்டாலோ யாரும் கத்தி கூப்பாடு போடுவதில்லை. பெரும்பாலும் ஒரு மன்னிப்புடன் முடிந்துவிடுகிறது. நண்பர்கள் சந்தித்தால் அதிகம் தொழில் சம்பந்தமாகவோ, பங்கு சந்தை சம்பந்தமாகவோ தான் பேச்சு இருக்கிறது. அது டீ கடை ஆகட்டும், அல்லது அலுவலக சாப்பாட்டு நேரமாகட்டும். சினிமா, அரசியல் வெட்டிப் பேச்சுக்கள் நான் அதிகம் கண்டதில்லை.

மோடி முதலமைச்சர் ஆவதற்கு முன்பிருந்தே குஜராத் வளர்சியில் இருந்த ஒரு மாநிலம் தான். இதற்கு முன்பிருந்த மற்ற முதலமைச்சர்களும் நன்றாகவே செயல்புரிந்து இருக்கிறார்கள். அப்படியிருக்க மோடி என்ன செய்தார்? ஏன் எங்கேயும் ஒரே மோடி பேச்சாக உள்ளது? மோடியின் 12 கால ஆட்சியில் என்ன முன்னேற்றம் கண்டுள்ளது மாநிலம்?
river linking
“கனவு என்பது தூக்கத்தில் வருவதில்லை, தூக்கத்தை கெடுப்பது” என்பார் மோடி. அப்படியான அவர் கனவுதான் இன்றைய குஜராத். நதிகளை இணைக்க நாடே கூப்பாடு போட்டுக்கொண்டிருக்க, மோடியோ நதி இணைப்பை முடித்து, இந்தியாவையே தன் பக்கம் திரும்ப வைத்தார். காலம் காலமாக காய்ந்து கிடந்த ஆற்றில் எல்லாம் நீர் செல்ல ஆரம்பித்தது மாநிலம் செழிப்படைய ஆரம்பித்தது. அசாதாரண காரியத்தை அசராமல் செய்து முடித்தார். நாடே பொருளாதார பின்னடைவில் தள்ளாடிக்கொண்டிருக்க, உலக நாடுகளை எல்லாம் குஜராத்தில் முதலீடு செய்ய வைக்க “வைபரன்ட் குஜராத்” என்று 2003ல் ஆரம்பித்தார். அது ஒரு முதலீட்டார் மாநாடு. ஒளிவு மறைவு இல்லை, இழுபறி இல்லை..எல்லா ஒப்பந்தங்களும் மக்கள் முன் வெளிபடையாக பொது மேடையில் நடக்கும் ஓர் நிகழ்ச்சி. நாலு சுவர்க்குள் நடக்கும் பணப்பெட்டி மாற்றம் இங்கு இல்லை. கடைசியாக நடந்த நிகழ்ச்சியில் மொத்தம் 240 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீட்டிற்கு கையெழுத்தாகியுள்ளது.

Gujarat EB2001ல் மோடி பதவியேர்க்கும்பொழுது மாநிலத்தின் மின்சார பற்றாக்குறை 500 மெகாவாட்டாகவும், நிகர இழப்பு 2246 கோடியாகவும் இருந்தது. மாநிலம் முன்னேற வேண்டுமேன்றல் மின்சார பற்றாக்குறையை சரி செய்தே ஆகவேண்டும் என்று புரிந்த மோடியும் அவர்கள் அரசும் அதற்கு பாடுபட்டதை தனி புத்தகமே எழுதலாம். முடிந்தால் அடுத்த வலைப்பதிவில் எழுதுகிறேன். இதை சரி செய்ய மன்ஜூலா சுப்ரமணியம் என்ற நபரை தேர்ந்தெடுத்து பொறுப்பை ஒப்படைத்தார். இருக்கும் ஓட்டைகளை அடைத்தும், மின்சார வாரியத்திற்கு புது தெம்பளித்தும் ஒரு பெரும் புரட்சி ஏறக்குறைய 2 வருடத்திற்கும் மேலாக நடந்தது. அதன் பின் விளைவு, 2011/12ல் குஜராத்தில் தேவைக்கு மேல் இருக்கும் மின்சாரம் மட்டும் 2114MW. மின்சார வாரியத்தின் நிகர லாபம் 533 கோடி. இன்று தடையே இல்லாத மின்சாரம் கிராமம் முதல் நகரம் வரை குஜராத் முழுவதும் கிடைகிறது. கடந்த 2 வருடங்களில் நான் அங்கு 5 நிமிடங்களுக்கு மேல் மின்சார தடையை அனுபவித்ததே இல்லை. தமிழ் நாட்டு மக்களுக்கு யார் மேலாவது கோபம் வந்தால் மீண்டும் எனது 3வது பத்தியை படிக்கவும். கனவு போல் இருக்கிறதா? இன்னும் இருக்கிறது சொல்ல.
தொடர்ந்து மோடியின் கனவு தேசத்தில் பயணிக்கலாம். 

பாகம் 2ஐ படிக்க இங்கே கிளிக் செய்யவும்