மோடி: ஒரு மந்திரச்சொல் – பாகம் 2

மோடியின் தேசத்தில் பயணத்தை தொடருவோம். 

narendramodi

போன அத்தியாயத்தில் மின்சார புரட்சியை கொஞ்சம் எழுதி இருந்தேன் அல்லவா? இதோ, அதில் மேலும் ஓர் புரட்சி. மின்சாரம் தேவைக்கு மேல் இருந்தாலும், இவர்கள் நின்றுவிடவில்லை. சூரிய ஒளியில் மாபெரும் புரட்சியை செய்தார் மோடி. நர்மதா ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கால்வாயின் மேல் சுமார் 750 மீட்டர்  நீளத்திற்கு சூரிய பலகைகளை வைத்து, 600 மெகாவாட் மின்சாரத்தை எடுக்க மிகப்பெரிய திட்டமிடப்பட்டு நிறைவேற்றியும் விட்டார். இது மாபெரும்புரட்சி என வல்லுனர்களால் கணிக்கப்படுகிறது. அதாவது, கால்வாயின் மேல் போடுவதால், நிலப்பரப்பு வீணாவதை தடுத்துள்ளனர். மேலும், வெப்பத்தில் நீர் ஆவியாவதையும் தடுத்துள்ளனர். ஏறக்குறைய வருடத்திற்கு 90லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதை தடுக்கப்படுகிறது. மேலும் கீழே நீரோட்டம் இருப்பதால், சூரிய பலகைகள் குளிர்ச்சியாக வைக்கப்பட்டு மின்சார உற்பத்தி இங்கே அதிகரிக்கிறது. இந்தியாவில் சூரிய ஒளியில் தயாராகும் மொத்த மின்சாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு குஜராத்தில் தயாராகிறது. இயற்கை வழி மின்சாரம் எடுக்கும் முறையில் புது புரட்சி செய்து உலகையே தன் பக்கம் திரும்ப வைத்தார் மோடி.

குஜராத்தின் எந்த மூளைக்கு சென்றாலும் நீங்கள் வளர்ச்சிப்பணி நடப்பதை பார்க்க முடியும். எந்த ஒரு நகரத்திற்கும் சாலை வழியாக தைரியமாக செல்ல முடியும். எனக்கு தெரிந்தவரை எல்லா நகரங்களும் நால்வழிப்பாதையினால் இணைக்கப் பட்டிருக்கிறது. மேலும் தலைநகரான காந்திநகரில் சிக்னலே இல்லாத சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமில்லை இந்தியாவிலேயே அதிக உள்ளூர் விமான நிலையங்களை கொண்ட மாநிலம் குஜராத் தான்.

மிகப்பெரிய நகரங்கள் மோனோ ரயில், மெட்ரோ ரயில் என திட்டம் தீட்டிக்கொண்டிருக்க, மோடியோBRTS1 BRTS (Bus Rapid Transit System) என்று ஒரு புது முறையை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். வேகமாக வளர்ந்துவரும் அஹமதாபாத் நகரை சீரமைக்க சரியான போக்குவரத்து அமைப்பு தேவைப்பட்டது. அதன் விளைவு தான் BRTS தோற்றம். சாலைகளின் நடுவே இருவழி சாலை அமைத்து, அதில் இந்த BRTS  பேருந்துகளை மட்டும் விடுவது தான் இந்த திட்டம். வேறு எந்த வாகனமும் உள்ளே வர அனுமதி இல்லை. அதனால், நெரிசல் மிகுந்த இடத்தில் கூட, இப்பேருந்துகள் தொந்தரவின்றி செல்கின்றன. படத்தை பார்த்தால் புரியும் என நினைக்கிறன். மேலும் இப்பேருந்துகளுக்கென தனி பேருந்து நிறுந்தங்கள் அமைக்கப்படுகின்றன. அங்கு தான் நீங்கள் டிக்கெட் வாங்க முடியும், ஏறவும் இறங்கவும் முடியும். நடத்துனர் இல்லாமல் ஓடும் பேருந்துகள் இவை. மேலும் இப்பேருந்துகள் அனைத்தும் GPS முறையில் கண்கானிக்கபடுகின்றன. ஓட்டுனர் தொடர்ந்து நிலவரத்தை அலுவலகத்துக்கு தெரிவிக்க வழி செய்யப்பட்டுள்ளது. எதாவது ஓர் நிறுத்தத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், ஓட்டுனர், உடனே அலுவலகத்திற்கு தெரிவிக்கிறார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு புது பேருந்து நெரிசல் மிகுந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு கூட்டம் சமாளிக்கப்படுகிறது. 

இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் கூட ஒரு வித்தியாசம் தான். திட்டத்தை  விளம்பரப்படுத்த ஆBRTSகும் செலவை கணக்கிட்டு, அதற்கு பதிலாக முதல் மூன்று மாதங்கள் னைத்து பயணிகளும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தனர். பின்னர், அந்த மூன்று மாதங்களில் பயணிகளிடமிருந்து வந்த பரிந்துரைகளை அமல்படுத்தி திட்டத்தை மேலும் மெருகேற்றினர். முன்னேற்றம் என்பது எல்லோரும் காரில் செல்வதில் இல்லை. பணக்காரர்களும் பொது/அரசு போக்குவரத்தில் செல்வதே ஒரு முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது” என்று நான் மீபத்தில் படித்த ஒரு வாசகம் இங்கே அருமையாக பொருந்தும். முதல் கட்டம் வெற்றிகராமாக நிறைவேற்றியவுடன் இப்பொழுது அஹமதாபாத் நகரம் முழுவதும் BRTS மூலமாக இணைக்க முழு வீச்சில் வேலை நடந்து வருகிறது. மக்கள் இத்திட்டத்தின் மூலம் 70% நேரத்தையும் 50% பணத்தையும் சேமிக்க முடிகிறது என்கின்றனர். இன்றைய நிலவரப்படி சராசரியாக தினம் ஒரு லட்சம் பேர் பயணிப்பதாக கூறப்படுகிறது.

ஆச்சரியங்கள்  முடியவில்லை, மேலும் தொடர்கிறது. சபர்மதி ஆற்று படுகை திட்டத்தை கேள்விப்பட்டீர்களா? அஹமதாபாத் நகரின் நடுவில் செல்லும் ஆறுதான் சபர்மதி. இந்த சபர்மதியின் இரு படுகையிலும் அழகு படுத்தி, அங்கு பூங்காக்கள் அமைSabarmati_Riverfront,_Ahmedabadப்பதும், மக்கள் பொழுதுபோக்கு இடமாக மாற்றவும் தொடங்கப்பட்ட திட்டம் தான் இது. அதாவது ஏறக்குறைய 20 கிலோமீட்டர்கள் செய்யப்படும். பல்வேறு கடைகள், உணவகங்கள், ஆற்றை ரசிக்க இருக்கைகள் என திட்டம் மிகப் பெரியது. சிலர் இங்கே மிதக்கும் உணவகங்கள், பொழுதுபோக்கு படகுகள், படகு சவரி என பிற்காலத்தில் வரும் என கூறுகிறார்கள். இது மோடி அரசால் ஆரம்பிக்கப்பட்டது இல்லை. ஆனால், தூங்கிகொண்டிருந்த திட்டத்தை தூசு தட்டி, வேலையை தூரிதபடுத்தியது, திட்டத்தை பல மடங்கு மாற்றி வெளிநாட்டிற்கு ஈடான தரத்தில் அமைக்க ஆரம்பித்தது மோடி பொறுப்பேற்ற பிறகுதான். பல பிரச்சனைகளை தாண்டி இன்று வெற்றிகராமாக அமல் படுத்திக்கொண்டு இருகிறார்கள். முதல் முறை நான் பார்த்த பொழுது, நான் இந்தியாவிலா இருக்கிறேன் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

இப்படி மாநிலத்தின் வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் விட நாம் மிக முக்கியமாக பார்க்க வேண்டியது, மோடியின் நிர்வாகத் திறமையை. அதை அடுத்த பாகத்தில் பாப்போம். கவலை வேண்டாம், அடுத்த பாகத்தில் கண்டிப்பாக தொடரை முடித்து விடுகிறேன். ரொம்ப இழுக்க விருப்பமில்லை.
கொஞ்சம் காத்திருங்கள்.