நானும், என் சிந்தனைகளும்….

Author

Anand Kumar S

“Briefly” என்பதற்கு அர்த்தம்?

ஐந்தாவது வரை தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்புக்கு ஆங்கிலவழி கல்விமுறையில் நடக்கும் சைனிக் பள்ளியில் சேர்ந்த ஆரம்ப காலம் அது. நல்லவேலை அந்த வேதனை காலத்தில் நான் தனியாகவெல்லாம் மாட்டிக்கொள்ளவில்லை. கூட ஒரு கூட்டமே இருந்தது. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு தான். பரீட்சை வினாத்தாள்களில் “Answer Briefly” என்று ஒரு கேள்வி வந்துவிட்டால்… Continue Reading →

வங்கிகள் யாருக்காக?

“ஒரு துப்பாக்கி உங்களிடம் இருந்தால் வங்கியை கொள்ளை அடிக்கலாம். அதுவே உங்களிடம் ஒரு வங்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்” – பில் மகேர் (https://en.wikipedia.org/wiki/Bill_Maher) முதலில் படிக்கும்பொழுது சிரிப்பு வந்தது. ஆனால் அதன் அர்த்தம் புரிந்தபொழுது அதன் ஆழம் புரிந்தது.

கோவையின் அடையாளங்கள்

பால்ய சினேகிதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டிற்க்கு வருவதற்கு வழி கேட்பதற்காக அந்த அழைப்பு. இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று வினவினேன். அதற்கு அவனோ ராஜலக்‌ஷ்மி மில்ஸ் அருகில் இருக்கிறேன் என்றான். ஒரு நிமிடம் யோசித்தேன், இப்படி விலாசம் சொல்லும் மக்கள் இப்பொழுது கோவையில் மிகவும் குறைவு. எனக்கோ முகத்தில் ஒரு சிறு புன்னகை.

மக்களின் நாயகன்

“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…! ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல! நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்! அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி… Continue Reading →

நாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்

நேற்று மாலை நானும் மனைவியும் அருவி படம் பார்க்கலாம் என்று பக்கத்தில் உள்ள திரையரங்குக்கு சென்றோம். இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்க வரிசையில் நின்று திரையில் ஓடும் விலைப்பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தேன்.  முன்னிருப்பவர் பொருள் வாங்கிகொண்டு நகர்ந்தார். நான் ஒரு பாப்கார்ன் சின்னது கொடுங்கள் என்றேன். அவரோ, இல்லை சார் மீடியம் மற்றும் லார்ஜ் மட்டுமே உள்ளது என்றார்…. Continue Reading →

மழை காலம் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. பெங்களூருவில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருக்கும்போது நெடுஞ்சாலை நடுவே இருந்த செடிகள் வித விதமான வண்ணங்களில் அழகாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அதை என் அலைபேசியில் எடுத்தது.

என் தங்கை மகள் பிரத்திகா. தங்கை குடும்பம், குடும்ப புகைப்படம் எடுப்பதற்க்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். பிரத்திகா முதலில் தயராகி உட்கார்ந்திருந்தாதால் அவளை ஒரு புகைப்படம் எடுக்கலாம் என எண்ணி எடுத்தது. இவ்வளவு அழகாக வரும் என்று எண்ணவில்லை. இதுவும் அலைபேசியில் எடுத்ததே…

அவ்ளோ சுலபமா உங்கள விடமாட்டோம்

ஒரு நாள் ஏர்டெல்லில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில்: “சார் இப்போ நாங்க ஹை-ஸ்பீட் மோடம் மாத்தி கொடுத்துகிட்டு இருக்கோம். இந்த மோடம் மூலமா உங்க இண்டர்நெட் ஸ்பீட் 16Mbps முதல் 40 Mbps வரை இருக்கும். இதற்க்கு நீங்க ரூபாய் 1000 மட்டும் கட்டினால் போதும்” என்றார்கள். (நான் உடனே அவர்களுடைய வெப்சைட்டை எனது… Continue Reading →

கோவையிலிருந்து கரூர் செல்லும்போது, மேகம் மழைமூட்டத்துடன் அழகாக இருந்தது. பொங்கலூர் அருகே செல்லும்பொழுது வானையும் மேகத்தையும் காரில் செல்ல செல்ல புகைப்படம் எடுக்க தோன்றியது. வண்டியின் வேகத்தை சிறிது குறைத்து லாரி குறுக்கே வருவது அறியாமல் எடுத்த படம் இது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே… இடம்: பொங்கலூர், கோவை – திருச்சி சாலை  

எங்களுடைய குலதெய்வ கோவிலின் கோபுரம்.  அதன் வேலைப்பாடும் மங்காத வண்ணமும், அழகான கார் மேகங்களும் இதை அவ்வளவு அழகாக காண்பிக்கின்றது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே. இடம்: முத்தூர், ஈரோடு மாவட்டம்

© 2018 நானும், என் சிந்தனைகளும்…. — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑