SAMSUNG: வெற்றிப் பாதை

இப்பொழுது நாம் எந்த எலக்ட்ரானிக் பொருள் வாங்க சென்றாலும் காதில் விழும் பெயர் சாம்சங். 1938ல் ஆரம்பிக்Samsungகப்பட்ட இந்த தென்கொரிய கம்பெனி   கடந்த சில வருடங்களில் உலக சந்தையில் வெகு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை கவனித்திருப்பீர்கள்.

2011ம் வருடம் இந்தியர்கள் வாங்கிய 11 மில்லியன் செல்போன்களில் 34% சாம்சங் தயாரிப்புதான். பல வருடங்கள் முன்னணியில் இருந்த நோக்கியா இப்பொழுது பின்னே தள்ளப்பட்டது.

அது மட்டும் இல்லை, தொலைக்காட்சி தயாரிப்பிலும் சாம்சங் முன்னணியில் உள்ளது. LED  எனப்படும் புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே சாம்சங் தான். SONY LED தொலைக்காட்சிகளில் உபயோகப்படுத்தப்படுவதும் சாம்சங்ன் LED தயாரிப்புகளே. தொலைக்காட்சி விற்பனையில் சோனி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.  இத்தனை நாளாக ஒரு கொரிய கம்பெனியாகவே பார்க்கப்பட்ட சாம்சங் இப்பொழுது அதை மாற்றி உலக எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் முன்னணியில் உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த அசுர வளர்ச்சிக்கானமுழுமையான காரணம் என்ன என்று வியந்ததுண்டா? நான் வியந்து இருக்கிறேன். அதற்காக நான் தேடி படித்த சில தகவல்களை இங்கே தொகுத்துள்ளேன்.அதிகம் நான் படிக்க நேர்ந்தது சாம்சங்-ன் செல்போன் சம்பந்தமான வளர்ச்சியை பற்றித்தான்.

ஓமர் கான் (Omar Khan) தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த காலத்தில் தான் கேளக்சி (Galaxy) செல்போன் அறிமுகமானது. Galaxy தோன்றுவதற்கும், அதன் வெற்றிக்கும் அவர் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மூன்று வருடங்கள் கூட சாம்சங் குழுமத்தில் இருக்கவில்லை. ஆனால் அவரது இந்த மூன்று வருட உழைப்பு ஒரு மைல் கல் எனலாம். செல்போன் தயாரிப்பில் சாம்சங்கிற்கு இவர் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் என்று கண்டிப்பாக கூறலாம்.

யூன் வூ லீ (Yoon Woo Lee)  yoon-woo-lee

இந்த குழுமத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் யூன் வூ லீ. 66 வயதான யூன் 1988 முதல் இக்குழுமத்தில்இருக்கிறார். சாம்சங்-ன் வளர்ச்சியில் இவருடைய பங்கு மிகப்பெரியது. தொழில்நுட்ப பட்டதாரியான இவர் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ்-கு (Steve Jobs, Apple) இணையாக கருதப்படுகிறார். உலகின் தொழில்நுட்ப வல்லுனர்களில் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் முதல் 20 பேரில் இவரும் ஒருவர். சாம்சங் நுகர்வோர் சந்தையில் முன்னணி வகிப்பதிற்கு இவருடைய மேலாண்மை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


ஜீ சுங் சோய் (Gee-Sung Choi)

சாம்சங் குழுமத்தில் குGee-Sung Choiறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் துறையில் சமீபகால  சிறப்பான செயல்பாட்டிற்க்கு இவர் மிக முக்கிய காரணம். இவர் தலைமை பதவி காலத்தில் தான் சாம்சங் மொபைல் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தில் 30 வருடத்திக்கும் மேலாக இருக்கும் இவர், படிப்படியாக முன்னேறி முதன்மை பதவியை அடைந்தவர். தொலைக்காட்சி சந்தையில் சாம்சங்-ஐ முதன்மை படுத்திய பெருமையும் இவருக்குத்தான் சேரும்.

இவர்களின் மேலாண்மையும் இவர்களைப்போன்ற பலரின் உழைப்பும் சேர்ந்துதான் இந்த இடத்தை அடைய வைத்துள்ளது. சாம்சங்-ன் தொலைநோக்கு பார்வையும், தொடர் கண்டுபிடிப்புகளும் வெற்றிப்பதையை ஆழமாக அமைத்துள்ளது.

யூன் வூ லீ ஒரு பத்திரிக்கை பேட்டியில்  இப்படி குறிப்பிடுகிறார். “வேகமாக முன்னேறும் தகவல் தொழில்நுட்ப உலகில் நீங்கள் 2 மாதம் தாமதம் என்றால், நீங்கள்  தோற்றுவிடுவீர்கள். ஆக வேகமும், அறிவும் போட்டி போடும் இக்காலத்தில் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது.ஒரு பொருள் தயாரிப்பு கருத்தில் இருந்து முழுமையான பொருளாக (Concept to Rollout)  மாற முதலில் நாங்கள் எடுத்துக்கொண்ட காலம் 14 மாதம். ஆனால் இப்பொழுது வெறும் 5 மாதம் தான் தேவைப்படுகிறது. இது எங்களை காலத்திற்கு ஏற்ப போட்டிக்கு தயார் படுத்திய விதத்தில் ஒன்று.

யூன் பதவி ஏற்ற காலத்தில் சரியாக செயல்படாத 2 பில்லியன் மதிப்புள்ள தொழிற்சாலைகளை மூடினார். நிர்வாகத்தில் உள்ள பல மேலாண்மை குறைகளை சரி செய்ததன் மூலமாக உள்பூசல், குறைந்த அதிகாரத்துவம், வேகமான மேலாண்மை முடிவுகள் என மிக முக்கியமான மாற்றங்கள் இன்றைய வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டினார்.

லாபத்தை விட்டுவிட்டு எதிர்காலத்தை பார்க்கும் எண்ணத்தை ஊழியர்களிடம் விதைத்தனர். தொடர் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, மக்களின் தேவையை அறிதல், உள்கட்டமைப்பை தொடர்ந்து சீரமைத்தல், திறமையான பணியாளர்களை தேர்ந்தெடுத்தல் என முன்னேற்றத்தை தீர்மானித்து தொடர்ந்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது என்பதை நிரூபித்துள்ளனர்.

நுகர்வோர் சந்தையில் இன்று இவர்களின் பொருட்களை தவிர்க்க முடியாததாகி விட்டது. SONY என்பது கடந்த காலம், SAMSUNG என்பது எதிர்காலம் என்பதில் சந்தேகமில்லை.

இனி இவர்கள் பந்தயம் கட்டுவது மருத்துவ சாதனங்கள், உயிர் தொழில்நுட்பம் மருந்துகள் (Biotech Drugs), LED விளக்குகள், சூரிய பலகைகள் (Solar Panels) என முற்றிலும் புதிய துறையில். வெற்றிபெற   வாழ்த்துவோம்.