கூகிள் தேடல்
நீங்கள் என்ன மதம், உங்களுக்கு என்ன பிடிக்கும், யாரை பிடிக்கும், என்ன மருந்து வாங்க முயன்றீர்கள், எப்பொழுதாவது தற்கொலைக்கு முயற்சி செய்தீர்களா, யாருடன் அடிக்கடி தொடர்புகொள்கிரீர்கள், என்ன பேசினீர்கள், என்ன மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் எ


ஜிமெயில் (Gmail) ஆரம்பித்த பொழுதே, நிறைய வல்லுனர்கள் அதை எதிர்த்தார்கள். ஜிமெயில் நம்முடைய மின்னஞ்சலை படிக்கிறது. நீங்கள் யாருக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சரி, அது கூகுளால் படிக்கப்படுகிறது. மனைவிக்கு, நண்பர்களுக்கு, வக்கிலுக்கு, முதலாளிக்கு என யாருக்கு நீங்கள் அனுப்பினாலும் சரி. அதை படித்து, அதில் இருக்கும் பொருளுக்கு ஏற்ப உங்கள் மின்னஞ்சலில் விளம்பரம் காத்திருக்கும். உதாரணத்திற்கு நீங்களும் உங்கள் நண்பரும் மின்னஞ்சலில் வெளியூர் செல்லும் திட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்தால் உங்கள் மின்னஞ்சலில் மலிவான டிக்கெட் பற்றியோ, நீங்கள் செல்லும் ஊரின் ஹோட்டல் விளம்பரமோ இருக்கும். உதாரணத்திற்கு அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். நாம் எழுதும் மின்னஞ்சல் ரகசியம் என்று நீங்கள் நினைத்தால் தவறு. நீங்கள் மின்னஞ்சலை முழுவதுமாக நீக்கினாலும் (Delete) அவர்களிடம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதில் உள்ள வரிகளை வைத்துத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள்.
கூகிள் Latitudeஇந்த சேவை உங்களின் கைபேசியுடன் வருகிறது. இதை நீங்கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், நீங்கள்


அருகில் கொடுத்துள்ள படத்தை பாருங்கள், உங்களுக்கு தெளிவாக புரியும். இது என்னுடையது தான். 10 மாதத்திற்கு முன் நான் எந்த எந்ததெந்த சாலையில் எந்தனை மணிக்கு சென்றேன் என்பதை இன்று நான் பார்த்து தெரிந்து கொண்டேன். உங்கள் நண்பருடன் நீங்கள் உங்கள் சேவையை பகிரும்போது, உங்கள் நண்பர் நீங்கள் எங்கே செல்கிறீர்கள், எந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருக்குறீர்கள் என எல்லாவற்றையும் அவர் பார்க்க முடியும். ஒரு தனிமனிதனை வியாபிக்கும் (Broadcasting) எந்த ஒரு செயலும் பாதுகாப்பனதன்றே.
Google Maps
இது மட்டுமல்ல. கூகிள் உலகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறது. கூகிள் வரைபடங்களில் (Maps), உலகத்தின் அனைத்து இடங்களையும் படம் பிடித்து விட்டார்கள். உக்கார்ந்த இடத்தில் இருந்து அமெரிக்காவின் வீதிகளை நேரில் பார்ப்பது போல் பார்க்க முடியும். அருகிலுள்ள படத்தைப் பாருங்கள். இது நான் இங்கு இந்தியாவில் அமர்ந்துகொண்டு
அமெரிக்காவின் வீதியை பார்க்க கூகிள் உதவியதன் படம், முகவரி முதல் கொண்டு பார்க்கலாம். கூகிள் நேரடி ஒளிபரப்பு வீடியோ கேமராக்களை உலகின் பல இடங்களில் பொருத்தியுள்ளது. உங்கள் வீட்டின் வெளி சுவற்றை எப்போ இடித்தீர்கள், எப்போ மீண்டும் கட்டினீர்கள் என்று கூகுளால் சொல்ல முடியும் என்றால் அது மிகையல்ல.
இதெல்லாம் இப்படி இருக்க, உங்கள் கணினியிலேயே ஒரு ரகசிய உளவாளி உண்டென்றால் அது கூகிள் குரோம் தான். இத்தனை செய்யும் அவர்களா கணினியில் இருந்து உங்களை பற்றி விசயங்களை சேகரிக்காமலா விடுவார்கள். இதெற்கெல்லாம் மேலாக இப்பொழுது ஆண்டிராய்ட் தொழில்நுட்பம் வேறு. நம் பொழுதை பாதி நேரம் கணினியிலும் மீதி நேரம் கைபேசியிலும் கழிக்கும் காலம் இது. உங்களுடைய கைபேசி மட்டும் தான் உங்களுடையது, அதில் உள்ள அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக இன்னொருத்தரிடம் இருக்கிறது. இன்னும் இது போல பல சேவைகளை மக்களுக்கு கொடுத்து, நம்மை அவர்களின் அடிமை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நண்பர் கேட்டார், “இதிலென்ன இருக்கிறது, நாம என்ன கொலை குற்றமா செய்தோம் இவர்களை பார்த்து பயப்பட. என்னைப்பற்றி அவர்கள் தெரிந்து என்ன நடக்க போகிறது? நான் ஒன்னும் அவ்வளவு முக்கியமான ஆள் இல்லை” என்றார்.
இன்னொரு நண்பரோ “கூகிள் நமக்கு நல்லது தானே செய்கிறது. அவர்கள் என்ன நம்மை ஏமாற்றவா போகிறார்கள்? கூகிள் அந்த எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லை. கூகிள் வந்தவுடன் நம் வாழ்க்கை எவ்வளவு சுலபம் ஆகிவிட்டது. அதை நாம் ஏன் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்?” என்றார்.
சரி, வாடிக்கையாளர்களுக்கு கூகிள் தனது சேவைகளை முடிந்தவரை இலவசமாகவே தருகிறது. இத்தனையும் இலவசமாக கொடுத்து எப்படி பணம் செய்கிறார்கள் என்று நீங்கள் யோசித்தது உண்டா? அதிலும் உலகின் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் நிறுவனம். ஒன்று தெரிந்துகொள்வோம் கூகிள் எதையும் தயாரிப்பதில்லை. கூகிள் செய்வது எல்லாம் அடுத்தவர்கள் தகவல்களை தேடுதலும், அதை வைத்து பணம் சம்பாதிப்பதும் தான். அதாவது கூகிள் நம் தகவல்களுக்கு ஒரு இடைத்தரகர். அவர்கள் செய்த எல்லா பொருளுமே இவ்வேலையை ஒன்றை செய்யும். உலகின் எல்லா தகவல்களையும் சேகரித்து, நம் அனுமதியில்லாமல் அதை வைத்து பணம் சம்பாதிப்பது தான் கூகுளின் ஒரே செயல். உங்கள் ரகசியம் அவர்கள் பொக்கிஷம்.
விளம்பரதார்கள் மக்களைப் பற்றிய தகவல்களை தெரிய அலைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள அவர்கள் எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கும் நிலையில், கூகுளுக்கு பணம் சம்பாதிக்க வேறென்ன வேண்டும். இதில் தகவல் உரிமையாளரான நமக்கு எதுவும் தெரியப்போவதில்லை, எல்லாம் ரகசியமாக நம் பின்னால் நடக்கும். தகவல் தேவையின் தூண்டுதல் நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்கிறது. அந்த வரிசையில் அரசாங்கம் தான் முதலில் கூகிள் வாசலில் கை கட்டி நிற்கிறது. ஒவ்வொரு சராசரி மனிதனின் அனைத்து தகவல்களையும் கொடுக்க சொல்லி நிர்பந்ததுடன் காத்திருக்கிறது ஒவ்வொரு அரசாங்கமும்.
இந்தியா போன்ற தனி மனித சுதந்திரம் இல்லாத ஒரு நாட்டில், யார் கையில் நம்மை பற்றிய தகவல்கள் தெரிந்தாலும் விளைவுகள் மிக மோசம்தான். இன்றைய அரசியல் கலாச்சாரம் ஓங்கவும், தனி மனிதனை அடக்கவும் இவை அரசாங்கத்துக்கு பயன்படாது என்று நம்மால் உறுதி கூற முடியுமா? அதேபோல் நீங்கள் சாதாரணமாக நண்பரிடம் பேசியதுகூட ஒரு கட்டத்தில் உங்களுக்கே எமனாக வந்து முடியலாம். தொலைநோக்கில் பார்க்கும்பொழுது, விளைவுகளை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.
உலகின் எல்லா தவவல்களுக்கும் காவலாளியாகவும், பிரத்தியேக உரிமையாளராகவும் இருக்கும் ஒரு நிறுவனத்தை நம்பி நாம் நம் தலையெழுத்தை கொடுத்துள்ளோம். இதுவரை நீங்கள் கொடுத்த தகவல்களை சுவடு இல்லாமல் அழிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இணையத்தில்உபயோகப்படுத்த ஆரம்பிக்கும்போதே நம்முடைய அடையாள சுவடுகளை உலகத்தின் எதோஓரிடத்தில் பதிய வைக்கிறோம். தினம் தினம் ஒரு புது பரிமாணத்தை காணும் தொழில்நுட்பத்தில் மாபெரும்நிறுவனங்கள் கோடி கணக்கில் செலவு செய்து எதையாவது அறிமுக படுத்திக்கொண்டேஇருக்கிறார்கள். தொழில்நுட்பம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? நம்முடைய தலையெழுத்தை நாமே இவர்களிடம் பணயம் வைக்கிறோமா?
கோடான கோடி மக்கள் பற்றிய தகவல்கள் ஒரு தனி நிறுவனத்திடம் இருப்பது அவ்வளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் இல்லை. இன்று லேரியும் & செர்கியும் (Larry Page & Sergey Brin – Google Founders) நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் இது ஒரு பொது நிறுவனம். நாளை யார் வேணாலும் இவர்களிடத்தில் இருக்கலாம். எப்படி வேணாலும் தகவல்கள் உபயோகப்படுத்தப்படலாம். அவர்களுக்கு வரைமுறைகள் கிடையாது, சட்டங்கள் கிடையாது, கேள்விகள் கிடையாது, நீதி நெறிமுறை கிடையாது. எல்லோரும் சொல்வது ஒன்றுதான் “கூகுளை நம்புவோம்”. இன்றைய உலகத்தில் நம்பிக்கைக்கும் & எதேசைக்கும் (coincidence) இடமில்லை.