உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ, இவ்வுலகத்தில் உங்களைப் பற்றி அனைத்தும் தெரிந்த ஒருவர் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நீங்கள் செய்த பல விசயங்களை ஆதாரத்துடன் வைத்திருப்பவர் இவர். என்றோ செய்த ஒரு விசயத்தை தேதி, நேரம் முதல் உங்களுக்கு கொடுக்கும் வல்லமை படைத்தவர். உங்களுடையது மட்டுமல்ல, உலகின் கோடானகோடி மக்களின் குடுமியை இறுக்கி கையில் பிடித்து இருக்கும் அவர் யார்? கடவுள் என நீங்கள் நினைத்தால், அந்த கடவுளின் பெயர் கூகிள்.நீங்கள் கூகிள் பயனாளராக இருந்தால் நான் சொல்வதை எல்லாம் உங்களால் நன்றாகவே தொடர்பு படுத்தி பார்க்க முடியும். உங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.