அட நம்ம சிம்புவா இது…? நல்ல தேர்ந்த நடிப்பு, சரியான தேர்வு. படம் முடிந்து வெளியே வரும் பொழுது, எதோ ஒரு உணர்வுபூர்வமாக இருக்கிறது. இது போன்ற மென்மையான படங்கள் என்னை எப்பொழுதுமே கவர்கின்றன. மொழி, பசங்க மற்றும் அழகிய தீயே அவைகளில் சில.
இன்றைய இளசுகளின் இதய துடிப்பை அறிந்து திரைக்கதை எழுதி இருகிறார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் காதலிப்பது, முதலில் நண்பர்களாக இருப்போம் என சிம்பு வழிவது என பல விஷயங்கள். இன்று கலாச்சாரம் எங்கு போய் இருக்கிறது என்பதையும் சொல்ல மறக்கவில்லை. முத்தம் கொடுப்பது ஒன்னும் பெரிய விஷயமில்லை????, கொடுத்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் போய் விடலாம் என்பதுவரை…
ஒளிபதிவாளருக்கு தனி பாராட்டுக்கள்! கேரளாவை இப்பொழுதே சுத்தி பார்க்கவேண்டும் என தூண்டும் காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் அழகு. நல்லவேளை நாயகனுக்கு நண்பர்கள் என்று 4 பேரை போடாமல் இருந்தார்கள். கேமராமேனாக வரும் கணேஷ் நல்ல தேர்வு. அவர் குரல், அருமை.
ஆனால், அந்த அண்ணன் கேரக்டர் மட்டும் கொஞ்சம் நீக்கி இருக்கலாம், இல்லை மாற்றி அமைத்து இருக்கலாம். திருஷ்டி பொட்டு போல. வழக்கமான கதை போல் ஆகிவிடுமோ என்ற பயம் என்னக்கு கொஞ்சம் இருந்தது. நம்ம ரகுமான் இசை, வழக்கம்போல 4, 5 முறை பாடல்கள் கேட்டால் தான் பிடிக்க ஆரம்பிக்கும்.
மொத்தத்தில், சில நெருடல்களை தவிர்த்தால், மென்மையான, அழகான காதல் படம். கண்டிப்பாக பார்க்கலாம்.