அந்த 24 வயது இளைஞன் இரயில் சன்னலின் அருகில் அமர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.”அப்பா, அங்க பாருங்க, மரம் எல்லாம் பின்னாடி ஓடுது”… அப்பா சிறிதாக புன்னகைத்தார்.
அருகிலிருந்த ஒரு இளம் ஜோடி, அந்த இளைஞனின் செயலை பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இளைஞன் மீண்டும் “அப்பா மேகம் எல்லாம் கூடவே ஓடி வருது” என்று சந்தோஷத்தில் கத்தினார்.
இதைப் பார்த்த அந்த இளம் ஜோடி தாங்க முடியாமல், “நீங்கள் ஏன் உங்கள் மகனை மருத்துவரிடம் அழைத்து சென்று பார்க்க கூடாது?” என வினவினர்.
இளைஞனின் அப்பா சிரித்துக்கொண்டே, “பார்த்துவிட்டுத் தான் வருகிறோம். இவருக்கு பிறவியில் இருந்து பார்வை தெரியாது. இன்றைக்குத்தான் பார்வை கிடைத்திருக்கிறது” என்றார்.
——————————–
இந்த கதையை நான் எழுதவில்லை. Facebook’ல் படித்தேன். பிடித்ததால், தமிழாக்கம் செய்துள்ளேன்.