போதும்டா சாமி…. ஆள விடுங்க

இன்று சிறு தொழில்களுக்கான ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டுத் தான் ஆரம்பித்தார்கள்.அழைக்கப்பட்டிருந்த முதன்மை விருந்தாளிகளில் ஒரு பல்கலைகழகத்தின் பேராசிரியரும் ஒருவர். அவர் பேச ஆரம்பித்த Conferenceபொழுது, இவரிடம் இருந்து வரும் மாணவர்கள் எப்படி வருவார்கள் என்று எண்ண தோன்றியது.

ஒருத்தார் பேசும்பொழுது குறுக்கிடக்கூடாது, பேசி முடித்தவுடன் பேச வேண்டும் என்ற ஒரு சிறு விசயத்தை கூட தெரியாமல் இருந்தார். அவர் செய்த சிறு சிறு தில்லு முள்ளு வேலையே எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

இதில் அவர் கூறிய மிகப்பெரிய கருத்துக்கள் சில இங்கே.

  1. தப்பு செய்வதில் தப்பில்லை. ஆனால் மாட்டாமல் செய்யவேண்டும்.
  2. பணம் எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம்/வரலாம். யாரும் நீ எப்படி சம்பாதித்தாய் என்று கேட்க மாட்டார்கள்.
  3. உன் பணத்தில் தொழில் செய்யாதே. அடுத்தவன் பணத்தில் தொழில் செய்.

அவர் சொன்னது வேற தொலைக்கட்சியில் வருமாம். நான் பாதியில் கிளம்பி வந்து விட்டேன்.

போதும்டா சாமி…. ஆள விடுங்க.