ஏப்ரல் 21, 2012 அன்று பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் நான் படித்த ஒரு சின்ன செய்தி…
கோவை மாணவர் இருவர் அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிய மிகப்பெரிய சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது….

“முதல் மாணவர் 5 நாட்களில் கிட்டத்தட்ட 100 மணி நேரம் தேர்வை சந்திக்க வேண்டியிருந்தது“. 5 நாட்களுக்கு மொத்தமே 120 மணி நேரம் தான்.
இது பரவாயில்லை.மேலும் படித்தால் “இரண்டாம் மாணவர் 3 நாட்களில் கிட்டத்தட்ட 80 மணி நேரம் தேர்வை சந்திக்க வேண்டியிருந்தது“. ஐயா, 3 நாளுக்கு மொத்தமே 72 மணி நேரம் தான். கணக்கு எப்படி போட்டீர்கள்?
என்னமோ போங்க, இப்படி எல்லாம் செய்தி படித்துதான் நாம் உலகை அறிந்துகொள்ள வேண்டி இருக்கு.