கலைஞர் காப்பீடு திட்டம் – வரவேற்கலாமா?

ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான சிகிச்சை இலவசம். இது தான் இதன் தாரக மந்திரம். இந்த பட்ஜெட்டில் இதற்காக 750 கோடி அறிவித்து இருக்கிறார்கள். என்ன ஓர் நல்ல ஐடியா. ஆனால் இது சரியா என்று எனக்கு தோன்றவில்லை.

எதற்காக இந்த அரசாங்க மருத்துவமனை என்ற திட்டம் நம் ஜனநாயக நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது? ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கத்தானே? அப்புறம் ஏன், ஒரு லட்சத்திற்கு அதை சுருக்குகிறார்கள்? ஏன் என்றால், நம் அரசாங்க Medicalமருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை. அப்படியானால், காப்பீடு திட்டத்திற்காக செலவு செய்யும் தொகையை அரசாங்க மருத்துவமனைகளை நவீனபடுத்தி, சிறந்த மருத்துவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் போதுமே, காப்பீடு திட்டமே தேவை இல்லையே.

இப்பொழுது அரசாங்க மருத்துவமனைகள் நல்ல சிறந்த மருத்துவர்களை கொண்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவையான, போதுமான வசதிகள் செய்து கொடுபதில்லை. சுற்றுபுறங்கள் சுத்தமாக வைத்து கொள்ளப்படுவதில்லை. எங்கு சென்றாலும் ஒரே துர்நாற்றம், அசுத்தம். மேலும், அக்கறையற்ற மெத்தனம் ஒவ்வொரு ஊழியரிடம். நான் எனக்கு தெரிந்த சில மருத்துவர்களிடம் பேசும்போது, நான் தெரிந்துகொண்டது, அரசாங்க மருத்துவமனைகள் நன்றாக நிர்வாகிக்கப்பட்டால், தனியார் மருத்துவமனைகளை விட இங்கே கூடம் அலைமோதும். இதை பொதுமக்கள் சிறப்பாக உபயோக படுத்துவார்கள். அப்புறம் எதுக்கு இந்த காப்பீடு திட்டம் எல்லாம்? தேவையே இல்லையே.

பட்ஜெட்டில் அறிவித்த இந்த 750 கோடியை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளை சீர்படுத்த உபயோகிப்பது ஒரு சிறந்த செயல் என்று நான் நினைக்கின்றேன். மேலும் இது போல் செய்தால், காலத்துக்கும் அழியாது கலைஞர் புகழ்.