என் எழுத்துக்கள்…

நண்பர்களே,

எனக்கு எழுதுவதில் மிகப்பெரிய ஆர்வம். ஆனால் இதுவரை நான் எழுதியது இல்லை. நிறைய படிப்பேன், படிக்கும்பொழுது நாமும் இது போல எழுத வேண்டும் என்று பல முறை நினைத்தது உண்டு. ஏன், என்னோட சுய சரிதை கூட எழுத வேண்டும் என்று சில நேரங்களில் வேடிக்கையாக நினைத்தது உண்டு. ஆனால், எந்த எண்ணத்தையும் நான் நிறைவேற்றவே இல்லை. இங்கே முதல் முதலாக ஆரம்பிக்க நினைத்து, வேலையே தொடர்கிறேன்.

நான் பல விஷயங்களை பற்றி எழுத விரும்புகிறேன். அரசியல், விளையாட்டு, தொழில், வர்த்தகம், விவசாயம் என அனைத்திலும் என் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இதுவே என் முதல் போர்க்களம். என் சிந்தனைகளை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை எழுத்துக்களாகி இங்கே இறக்கி வைத்துள்ளேன். இவை எல்லாமே என் சொந்த கருத்துக்கள். நன் யாரையும் புண்பட வைக்கும் எண்ணத்துடன் எழுதவில்லை. என் தவறுகளை சுட்டிக்காட்டி, என் சரிகளை பாராட்டி என்னை அரவணைத்து செல்லுங்கள்.