கலைஞர், மாபெரும் சக்தியாக சமீபத்தில் உருவெடுத்து இருக்கிறார். அசைக்க முடியாத கட்சியாக தனது கட்சியை நிலை நிறுத்தி இருக்கிறார். குடும்ப பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைத்து இருக்கிறார். வாரிசுகளுக்கு பதவிகளை பகிர்ந்து கொடுத்து இருக்கிறார். தன்னை மீண்டும் மாபெரும் ராஜதந்திரியாக நிரூபித்திருக்கிறார். தமிழக அரசியலில் பெயர் சொல்லும்படி நிறைய சாதனைகளை நிறைவேற்றி இருக்கிறார். அரசியலில் இருந்து விழக கடந்த 4 வருடங்களில் தன்னை முழுமையாக தயார் படுத்தியுள்ளார். கடந்த 70 வருட அரசியலில் இந்த 5 வருடம் தான் அவருக்கு மறக்க முடியாத வருடங்களாக இருக்க முடியும்,
மனிதர் எப்படி தான் இப்படி சுறு சுறுப்பாக இருக்கிறாரோ தெரியவில்லை. கட்சியை கவனிக்கிறார், திரைக்கதை எழுதுகிறார், எதிர்கட்சிக்கு பதிலடி கொடுக்கிறார், விழாக்களில் கலந்து கொள்கிறார், முரசொலியில் எழுதுகிறார், குடும்பத்தை வழிநடத்துகிறார், தேசிய அரசியலில் நட்பை தொடர்கிறார். இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் இந்த 84 வயது இளைஞர்.
ஆனால் இந்த மனிதர் ஒரு விளம்பர பிரியரா? இவருக்கு விழா எடுக்கவே ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறதா என்ன? என் மனசாட்சி “இருக்கலாம்” என்கிறது. பின்னே, தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவில், இவருக்கு “சிறந்த திரைக்கதை ஆசிரியர்” விருது தந்து கெளவுரவித்தார்களே! அவர் அரசு கொடுக்கும் விழாவில், அவருக்கே விருது. அதுவும் எந்த திரைப்படத்திற்கு? “உளியின் ஓசை” என்ற மாபெரும் வெற்றியடைந்த படத்திற்கு! கலைஞரே, நீரே சொல்லுவீர், இது சரி தானா? இதை பார்த்துகொண்டிருக்கும் மக்களாகிய எங்களை என்னதான் நினைத்து கொண்டு இருக்குறீர்கள்?
இந்த திரைப்பட துறை உங்களை விடாது போல… நீங்கள் அவர்களுக்கு என்ன கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை, அதற்கு வேறு ஒரு விழா…அதில் உங்களை பாராட்டவே ஒரு தனி கூட்டம். எதாவது ஒன்று செய்தல் போதும், பாராட்டு விழா எடுத்து விடுகிறார்கள். எதுக்கு? கலைஞர் தொலைகாட்சியை TRP ரேட்டிங்கில் உயர்த்தவா? இது ஒரு ராஜ தந்திரமா? அந்த நடனங்களையும், நடன அசைவுகளையும், பார்த்து கெட்டுபோகும் சிறுவர்கள் கணக்கில் அடங்காது. இதற்கு ஒரு இலக்கிய விழா எடுத்தால் கூட, உங்களின் திறமையை நாங்கள் கண்டுகளிப்போம்.
புது புது விழா எடுக்கவே, ஏன் யோசிக்கவே திறமை வேண்டும். இந்த தேவையற்ற நேரத்தை, உங்கள் ஒய்விற்கோ, இல்லை பயனுள்ள ஒரு திரைக்கதை எழுதவோ உபயோகிக்கலாமே?