தமிழ் புத்தகங்கள் இணையத்தில் வாங்க…

வலைதளங்களில் தமிழ் புத்தகம் வாங்க வேண்டுமென்றால் உடுமலை.com ஒருமுறை பாருங்udumalai_logo_newகள். உடுமலைப்பேட்டையில் இருந்து இயங்கும் இந்த வலைத்தளம் பல வகையான தமிழ்  புத்தகங்களை வலைத்தளம் மூலம் விற்கிறது. பல பிரசுரங்கள் வெளியிட்ட புத்தகங்களின் தொகுப்பை இங்கு பெற முடியும். எழுத்தாளர், புத்தக வகை வாரியாக நீங்கள் உங்களுக்கு தேவையான புத்தகத்தை தேட முடியும். தமிழ் புத்தகம் வாங்குவதற்கு இப்படி ஒரு தளம் இருப்பது எனக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு சிறு குறிப்பு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வெறும் புத்தகத்தின் பெயர், எழுத்தாளர் மற்றும் விலை மட்டும் இருப்பது கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.

மற்றபடி நாவல், சிறுகதை, விவசாயம், வரலாறு, ஹோமியோபதி, இலக்கியங்கள், தன்னம்பிக்கை, ஆராய்ச்சி கட்டுரைகள், பெண்களுக்கு, பெரியாரியல், நாடகங்கள், ஈழம், அறிவியல், பாடநூல்கள் என பலவகையான நூல்களை நீங்கள் காணலாம்.

நீங்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, உங்கள் வங்கி கணக்கில் இருந்தும், அல்லது கிரெடிட் கார்ட் மூலமாகவும் பணம் செலுத்தலாம். அல்லது மின்னஞ்சல், தொலைபேசி மூலமகவும் நீங்கள் ஆர்டர் செய்ய முடியும்.

இதுவரை இருமுறை உபயோகப்படுத்தி மிகவும் திருப்தி அடைந்துள்ளேன்.

அவர்களை தொடர்பு கொள்ள
www.udumalai.com
cs@udumalai.com
+91 73 73 73 77 42
+91 4252 222884