இயற்கை விவசாயம்: தகவல் தேடும் வேதனை

இயற்கை விவசாயத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டி இணையத்தில் தேடிய பொழுது எAgriன்னால் ஒரு சரியான வழிகாட்டும் வலைத்தளத்தை கண்டுபிடிக்கவே முடியவேயில்லை. நிறைய செய்திகள் நிறைய தளங்களில் சிதறி கிடந்தன. ஆனால் ஒரு கோர்வையான, தெளிவான வலைத்தளம் கண்ணில் படவேயில்லை. அதுவும், தமிழில் சுத்தம். நம்மாழ்வாரின் பதிப்புகள் கூட எதுவும் காணமுடியவில்லை. வருத்தமாக இருக்கிறது.

தேடுதலின் போது விவசாயத்திற்காக பாடுபடும் நிறைய தொண்டு நிறுவனங்களின் வலைத்தளங்களைப் பார்க்க முடிந்தது. அவை அனைத்தும் அவர்களின் பெருமையையும், செய்த வேலைகளின் படங்களையும், அவர்களின் சாதனைகளையுமே பேசுகின்றன. பொதுமக்களுக்கு தேவையான தகவல்கள் அவர்களின் வலைதளங்களிலிலும் மிக சொற்பமே.

பார்த்ததில் தமிழக விவசாய பல்கலைக்கழக வலைத்தளம் ஓரளவுக்கு தேவையான தகவல்களைக் கொடுக்கிறது. அவர்களின் வலைத்தளம்: http://agritech.tnau.ac.in/org_farm/orgfarm_basic%20steps.html

அது தவிர http://www.agricultureinformation.com/ வலைத்தளம் பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறது. பலர் இதில் வந்து கலந்துகொள்வது மிக மகிழ்ச்சியான விஷயம்.

மேலும் http://www.organicagriculture.co தளமும் சில முக்கியமான தகவல்களை பரிமாறுகிறது.

தேவையற்ற  விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் இணையம் தேவைக்கு தேவையில்லை போலும். மனதுக்கு வேதனை அளிக்கிறது. இதை பார்க்கும்பொழுது தமிழில் விவசாயத்திற்கு என்று ஒரு நல்ல தளத்தை ஆரம்பிக்கலாமா என்று தோன்றுகிறது. பார்ப்போம்….